உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடத்தப்பட்ட சிறிது நேரத்தில் தப்பி வந்த பள்ளி மாணவன்

கடத்தப்பட்ட சிறிது நேரத்தில் தப்பி வந்த பள்ளி மாணவன்

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அமலதாஸ் மகன் ரெக்சன், 12; தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர். வழக்கமாக சைக்கிளில் செல்லும் ரெக்சன், நேற்று காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு நடந்து சென்றார். திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி அருகே சென்ற போது, சிவப்பு நிற கார் அவர் அருகே சென்று நின்றது. அவரது வாயை துணியால் அழுத்தி, காரில் கடத்திச் சென்றனர். திருவாடானை மேல ரத வீதியில், காரை நிறுத்தி விட்டு இறங்கிய இருவர், அருகிலுள்ள கடைக்குச் சென்றனர்.அப்போது கதவை திறந்து தப்பிய ரெக்சன், திருவாடானை பஸ் ஸ்டாண்டிற்கு சென்று பஸ்சில் ஏறி, வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறினார். ரெக்சன் கூறியதாவது:காரில், டிரைவருடன் சேர்த்து இருவர் இருந்தனர். வாயில் துணியை வைத்து அழுத்தியதால் சத்தம் போட முடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற போது, பிளேடால் என் இடது கையை கீறினர். இருவரும் ஹிந்தியில் பேசிக் கொண்டனர். திருவாடானையில் காரை நிறுத்தியபோது, கதவை திறந்து தப்பினேன்.இவ்வாறு கூறினார்.திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார், கடத்தல்காரர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ