உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் நிறுத்தம் இல்லாத இடத்தில் நிழற்குடை; பயணிகள் அவதி

பஸ் நிறுத்தம் இல்லாத இடத்தில் நிழற்குடை; பயணிகள் அவதி

பரமக்குடி: பரமக்குடி, முதுகுளத்துார் ரோட்டோரம் உள்ள வெங்கடேஸ்வரா காலனியில் பஸ் நிறுத்தம் உள்ள நிலையில், மாற்று இடத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டதால் நெசவாளர்கள் சிரமப்படுகின்றனர்.பரமக்குடி நகர் புறங்களில் இருந்து குடிபெயர்ந்து வெங்கடேஸ்வரா, சத்தியமூர்த்தி காலனி, புண்ணிய பூமி என உருவாக்கியது. ஒவ்வொரு பகுதியிலும் 80 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் அரசு பஸ் நிறுத்தம் கோரி ஒவ்வொரு பகுதியிலும் பஸ் ஸ்டாப்களை அமைத்து இருந்தனர். கடந்த ஆண்டுகளில் வெங்கடேஸ்வரா காலனி பஸ் ஸ்டாப் பயணிகள் நிழற்குடை முற்றிலும் உடைந்து வீணாக்கியது.மழை, வெயிலில் வெட்ட வெளியில் காத்திருந்து மக்கள்செல்கின்றனர். தற்போது காலனியில் இருந்து நீண்ட துாரம் நான்கு வழி சாலை அருகில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பஸ் நிறுத்தம் இல்லாத சூழலில் நடந்து சென்று ஏற முடியாத நிலை உள்ளது.மேலும் இருள் சூழ்ந்த இடத்தில் உள்ள நிழற்குடையை உ.பா., பிரியர்கள் ஆக்கிரமிக்கின்றனர். மேலும் தற்போது வரை நிழற்குடை திறக்கப்படாமல் உள்ளது. எனவே முன்பு இருந்த நெசவாளர் காலனியில் பஸ்நிற்கும் இடத்தில் நிழற்குடை அமைக்க மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ