உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவிபட்டினம் ரோட்டோரம் குப்பையால் விபத்து அபாயம்

தேவிபட்டினம் ரோட்டோரம் குப்பையால் விபத்து அபாயம்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்படும் குப்பை காற்றில் பறப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வித்துக்களில் சிக்குகின்றனர்.தேவிபட்டினம் பகுதியில் இருந்து வெளி வரும் குப்பை, கிழக்கு கடற்கரை சாலை தேவிபட்டினம் அருகே முத்து ரெகுநாதபுரம் விலக்கு பகுதியில் ரோட்டோரத்தில் கொட்டப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ரோட்டோரத்தில் கொட்டப்படும் குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காற்றின் திசையில் அவ்வப்போது அடித்து செல்லப்படுகிறது.இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகன டிரைவர்கள் காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கவர்களால் விபத்துக்களில் சிக்குகின்றனர். மேலும் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையில் இருந்து வீசும் கடும் துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்லும் பயணிகள் பாதிப்படைகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டோரத்தில் கொட்டப்படும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், குப்பை காற்றில் பறக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி