சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை
ராமநாதபுரம்,: மதுரையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மஞ்சக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.மதுரையில் அன்பு ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு ஆகிய போட்டிகளில் பரமக்குடி அருகே மஞ்சக்கொல்லை ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளி மாணவர்கள் 7 பேர் பங்கேற்றனர்.இதில் மாணவி தர்ஷினி ஒற்றை கம்பு பிரிவில் முதல் பரிசு தங்கம், மாணவி ஜமுனா ராணி 2ம் பரிசு வெள்ளிப்பதக்கம், மாணவர்கள் நவீன் ராஜ், சந்தோஷ் பாண்டி, சஞ்சீவன், திலிப்குமார், தருண் பாலா ஆகியோர் 2ம் பரிசு வென்றுள்ளனர். சாதித்த மாணவர்களை பள்ளித் தலைமை யாசிரியர் அன்பு செல்வி, அறிவியல் ஆசிரியர் ரமேஷ் பாபு ஆகியோர் பாராட்டினர்.