உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடி பகுதியில் உரம் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

 பரமக்குடி பகுதியில் உரம் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

ஆர்.டி.ஓ., ஆய்வின் போது எச்சரிக்கைபரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் உரம் அதிக விலைக்கு விற்றால் கடைகளுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் எச்சரித்துள்ளார். பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிச.,25ல் நடந்தது. அப்போது கடைகளில் உரம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பார்த்திபனுார் உரக்கடைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார். அங்கு விவசாயிகள் 260 ரூபாய் உள்ள உர மூடைகள் 400 முதல் 450 ரூபாய் வரை விற்கப்படுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஆய்வுக்குப் பின் கடை உரிமையாளர்களிடம் அதிக விலைக்கு உரம் விற்பது தண்டனைக்குரிய குற்றம். இது குறித்து நிரூபிக்கப்படும் பட்சத்தில் அபராதம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் பரமக்குடி பகுதியில் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யப்பட உள்ளது. கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையும் தொடரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை