உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடிகர் சூரி பட ஷூட்டிங்கில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து

நடிகர் சூரி பட ஷூட்டிங்கில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து

திருவாடானை:நடிகர் சூரியின் மண்டாடி சினிமா ஷூட்டிங்கில், படகு கவிழ்ந்து கடலில் தவறி விழுந்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், நடிகர் சூரி நடிக்கும் மண்டாடி ஷூட்டிங் ஒரு மாதமாக நடக்கிறது. அப்பகுதி மீனவர்களை வைத்து படகு போட்டி நடப்பது போல், நேற்று முன்தினம் மாலை, தொண்டி அருகே முள்ளி முனை கடலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படகுகள் விரைந்து சென்றதில், ஒரு படகு கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். பலத்த காற்றுக்கு படகு, அலையில் ஆட்டம் கண்டதால் கேமராமேன் கையிலிருந்த விலை உயர்ந்த கேமராக்கள் கடலில் விழுந்தன. அதை மீனவர்கள் மீட்டனர். தகவலறிந்த தொண்டி மரைன் போலீசார் விசாரித்தனர். படகு போட்டி நடக்கும் போது ஒரு படகு கவிழ்ந்தது போல், காட்சி எடுக்கப்பட்டதாக படப்பிடிப்பு குழுவினர் போலீசாரிடம் தெரிவித்தனர். விதிகளுக்கு உட்பட்டு ஷூட்டிங் எடுக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை