மாரியூர் சிவன் கோயிலுக்கு கூடுதல் பஸ் வசதி தேவை
சாயல்குடி: சாயல்குடி அருகேயுள்ள மாரியூர் பூவேந்தியநாதர் (சிவன்) கோயிலில் கூடுதல் பஸ் வசதி வேண்டுமென பக்தர்கள் சாயல்குடியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலுக்கு முறையாக பஸ் வசதி இல்லாததால் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் வாகனங்களில் பக்தர்கள் பயணம் செய்யும் நிலை தொடர்கிறது. சாயல்குடி, கடலாடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாரியூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக இரவு 7:00 மணிக்கு மேல் பஸ் வசதி குறைவாகவே உள்ளது. பள்ளியறை பூஜையில் பங்கேற்பது விசேஷமாக கருதப்படுவதால் ஏராளமானோர் தனியார் வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சாயல்குடியில் இருந்து மாரியூர் கோயிலுக்கு ரூ.400 வீதம் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் பயணம் செய்யும் நிலை உள்ளது.எனவே அரசு போக்குவரத்துக் கழகத்தினர் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கூறினர்.