உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூடுதலாக வசூல்: கூட்டுறவு சங்கத்தில் ரூ.1500க்கு பதிலாக கூடுதலாக ரூ.300 பங்குத் தொகை செலுத்தும் மீனவர்கள் பாதிப்பு

கூடுதலாக வசூல்: கூட்டுறவு சங்கத்தில் ரூ.1500க்கு பதிலாக கூடுதலாக ரூ.300 பங்குத் தொகை செலுத்தும் மீனவர்கள் பாதிப்பு

ராமநாதபுரம்,: - மாவட்டத்தில் மீனவர்கள் கூட்டுறவு சங்கங்களில் சேமிப்பு நிவாரணத்திற்கான பங்குத்தொகை ரூ.1500 பெறுவதற்கு பதிலாக ஒவ்வொருவருக்கும் கூடுதலாக ரூ.200 முதல் 300 ரூபாய் வரை வசூலிப்பதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மீன் வளத்துறை சார்பில் மாவட்டத்தில் 120 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் குறைந்த பட்சம் 50 முதல் 2000 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சேமிப்பு நிவாரண தொகை வழங்குவதற்காக மீனவர்களிடமிருந்து ஒரு பங்கு வசூலிக்கப்படும். அதன் ஒரு உறுப்பினருக்கு ரூ.1500 வசூலிக்கப்படும். இதில் ஒரு பங்கினை மத்திய அரசு ரூ.1500 ம், மாநில அரசு ஒருபங்காக ரூ.1500 வழங்கும். இந்த சேமிப்பு நிவாரண தொகை மீனவர்கள் வங்கி கணக்கில் ரூ.4500 செலுத்தப்படும். தற்போது மீனவர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில் அந்த சங்கங்களுக்கு மீன் வளத்துறை அதிகாரிகள் பொறுப்பாளர்களாக செயல்படுகின்றனர். இதில் மீனவர்கள் சேமிப்பு பங்கு தொகை ரூ.1500 பெறுவதற்கு பதிலாக ரூ.1700 முதல் 1800 வரை ஒவ்வொருவருக்கும் கூடுதலாக ரூ.200 முதல் 300 ரூபாய் வரை வசூலித்து வருகின்றனர். கூடுதலாக சேமிப்பு தொகை மீனவர்கள் கூட்டுறவு சங்கங்களில் வசூலிப்பதால் மீனவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சேமிப்பு நிவாரண தொகை வழங்காத மீனவ உறுப்பினர்களுக்கு மீன்பிடி குறைவு கால தொகையாக ரூ.6000 வழங்கப்படும் அதனை வழங்கப்பட மாட்டாது, என மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். மீன் வளத்துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து மீனவர்கள் சேமிப்பு நிவாரணத்திற்கான தொகை ரூ.1500 வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ