விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தேர்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் 2025-26ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. 7 முதல் 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்றனர். கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து ஆகிய குழு விளையாட்டுகள் மற்றும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் மாணவர்கள் தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் கூறுகையில், 2025-26 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்கை தேர்வு மாவட்ட அளவில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடக்கிறது. ஆண்கள் பிரிவில் கலந்து கொள்ள 97 பேர் ஆன்-லைனில் பதிவு செய்னர்.அவர்களில் 76 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க உள்ளனர். இன்று மாணவியருக்கான தேர்வு நடக்கிறது என்றார்.