மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
09-Oct-2024
கமுதி : கமுதி ஒன்றியத்தில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் கமுதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் காளிமுத்து தலைமையிலும், ராமசாமிபட்டியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கருமலையான் தலைமையிலும் நடந்தது.முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாவட்டச் செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர். வரும் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியன், சதன்பிரபாகர், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் பெரியசாமித்தேவர், அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், முனியசாமி, நகர் செயலாளர்கள் சேதுபதி(அருப்புக்கோட்டை), மணி முருகன்(கமுதி), கூட்டுறவு சங்கத் தலைவர் கருப்பசாமி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
09-Oct-2024