மீனவர்கள் படகை விற்பனை செய்தால் தெரிவிக்க வேண்டும் ஏ.டி.எஸ்.பி. அறிவுரை
தொண்டி, : மீனவர்கள் படகு வாங்கும் போதும், விற்பனை செய்யும் போது கடலோரப் பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசினார்.தேவிபட்டினம், தொண்டியில் தேசிய அளவிலான கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கடலோர பாதுகாப்பு ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசியதாவது:கடலோர பாதுகாப்பில் மீனவ சமுதாய மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மீனவர்களின் படகுகள் போன்று அந்நிய சக்திகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் விழிப்புடன் இருந்து கடலோர போலீசாருக்குதகவல் தெரிவிக்க வேண்டும். மும்பை தாக்குதல் சம்பவம் போல் நடக்கக் கூடாது என்பதற்காகவே விழிப்புணர்வு கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகிறது.கடலில் மட்டுமல்ல, மீனவ கிராமங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வந்து சென்றாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மீனவர்கள் புதிய படகுகளை வாங்கும் போதும், பழைய படகுகளை விற்பனை செய்யும் போதும் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பேசினார். மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத், இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.ஐ.,க்கள் அய்யனார், கதிரவன், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.