உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் பொருட்கள் மிதந்தால் தகவல் தெரிவிக்க அறிவுரை

கடலில் பொருட்கள் மிதந்தால் தகவல் தெரிவிக்க அறிவுரை

தொண்டி : தொண்டி அருகே பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் கடலோர மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தொண்டி மரைன் எஸ்.ஐ., கதிரவன் தலைமை வகித்தார். மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், மீன்வள அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., குருநாதன், மீன்வள மேற்பார்வையாளர் கணேஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அலைபேசி, பாதுகாப்பு உடை, வாட்டர் கேன் எடுத்து செல்ல வேண்டும். கடலுக்குள் சந்தேக நபர்களை பார்த்தால் உடனடியாக மரைன் போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்.கடத்தல் பொருட்கள், சந்தேகப்படும்படி ஏதேனும் பொருட்கள் கடலில் மிதந்து வந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ