விவசாயப் பணிகள் தீவிரம்
தேவிபட்டினம்: தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையால் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நெல் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் உரமிடும் பணியை செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் நடவு செய்வதிலும், வரப்புகளை சீரமைப்பதிலும் தற்போது விவசாயிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். உரமிடும் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கடந்த ஆண்டை விட உரம் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.