உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீபாவளியை முன்னிட்டு இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

தீபாவளியை முன்னிட்டு இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் மையப் பகுதியாக இருப்பதால் தீபாவளி பண்டிகையான நேற்று ஆர்.எஸ். மங்கலம் டவுன் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில், ஆடு மற்றும் கோழி இறைச்சி வாங்குவதற்கு அதிகளவில் மக்கள் கூடினர்.வழக்கமாக செயல்படும் கடைகளை விட ரோட்டோரங்களில் புதிதாக ஆங்காங்கே கோழி, ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.வழக்கமாக ஆட்டுக்கறி கிலோ ரூ.800 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோழிக்கறி ரூ.250க்கு விற்பனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை