உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவர் சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் தங்ககவசம் அணிவிப்பு

தேவர் சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் தங்ககவசம் அணிவிப்பு

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.கடந்த 2014 அக்.,30ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.4.50 கோடியிலான 13.7 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவித்தார். அன்று துவங்கி ஆண்டுதோறும் தேவர் குருபூஜை விழாவில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, விழா முடிந்த பின்பு மதுரை தனியார் வங்கியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இவ்வாண்டு அக்.,30ல் 117வது ஜெயந்தி, 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று (அக்.,25) மதுரை வங்கியில் தங்க கவசத்தை பெற்று போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு வந்தனர். மதியம் 1:00 மணிக்கு முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தங்ககவசம் அணிவித்து மாலை மரியாதை செய்தனர். நினைவிடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை