அனைத்து பஸ்சிலும் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும்
திருவாடானை; திருவாடானையை மையமாக வைத்து 12 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் எட்டு பஸ்களுக்கு மட்டுமே தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது. திருவெற்றியூர், வட்டாணம், தோமாயபுரம், தொண்டி செல்லும் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தவில்லை. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து பயணிகள் கூறுகையில், கதவுகள் பொருத்தபட்ட சில பஸ்களில் கதவுகள் சரியாக மூடப்படாமலும், பழுதடைந்த நிலையில் இருப்பதாலும் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட துாரம் செல்லும் சில பஸ்களில் கதவுகளின் கைப்பிடியை பிடித்து ஏறி, இறங்கும் போது, கதவு நகர்வதால் பயணிகள் தடுமாறுகின்றனர். சில பஸ்களில் கதவுகள் பழுதானதால் கயறு கட்டியும் வைக்கபட்டுள்ளது. பழுதாகும் கதவுகளை உடனடியாக சரி செய்ய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.