உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி ஸ்டேஷனில் அனைத்து ரயில்களுக்கும் நிறுத்தம் தேவை என்.எஸ்.ஜி., 4 தரம் இருந்தும் பயனில்லை

பரமக்குடி ஸ்டேஷனில் அனைத்து ரயில்களுக்கும் நிறுத்தம் தேவை என்.எஸ்.ஜி., 4 தரம் இருந்தும் பயனில்லை

பரமக்குடி: என்.எஸ்.ஜி., 4 மேம்படுத்தப்பட்ட தரம் கொண்ட பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ராமேஸ்வரம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 2023--2024ம் நிதி ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 83 ஆயிரத்து 334 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பரமக்குடி ஸ்டேஷன் வருவாய் 10 கோடியே 15 லட்சத்து 54 ஆயிரத்து 830 ரூபாயாக உள்ளது.மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரையிலான ரயில் நிலையங்களை ஒப்பிடும் போது பரமக்குடி என்.எஸ்.ஜி., 4 என்ற மேம்படுத்தப்பட்ட தரத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக ராமேஸ்வரத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வாராந்திர மற்றும் சிறப்பு ரயில்கள் வருகின்றன.ஆனால் இத்தனை சிறப்புகள் கொண்ட பரமக்குடி ஸ்டேஷனில் எந்த ரயிலுக்கும் நிறுத்தங்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. பரமக்குடியை சார்ந்து முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி போன்ற பகுதியில் இருந்தும் பயணிகள் பயனடைகின்றனர்.எனவே செகந்திராபாத், ஹூப்ளி, பெரோஸ்பூர் கண்டோன்மென்ட், அயோத்தி கண்டோன்மென்ட், பனாரஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய வாராந்திர ரயில்களும், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ஒரு மார்க்கமாக செல்லும் ரயில் மற்றும் விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஆகியவை நின்று செல்ல வேண்டும்.இதன் மூலம் பரமக்குடி ஸ்டேஷன் வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து மேலும் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே ஸ்டேஷனில் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், பயணிகளின் பயணத்திற்காகவும் ரயில்கள் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளதாக செயலாளர் புரோஸ்கான் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை