மேலும் செய்திகள்
டூவீலர் மோதி முதியவர் பலி
07-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம், மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ், அவைத் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர்.பள்ளியில் ஆண்டு விழா நடத்துவது தொடர்பாக மாணவர் சங்கத்தின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சுற்றுப்புற கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளி இறுதி வகுப்பு முடித்து வெளியேறும் மாணவர்களை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.சங்க நிர்வாகிகள் பகுர்தீன், அயூப்கான், பரக்கத் அலி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
07-Dec-2024