உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் சி.சி.டி.வி., கேமராவுக்கு முன்னாள் மாணவர்கள் நிதியுதவி

பள்ளியில் சி.சி.டி.வி., கேமராவுக்கு முன்னாள் மாணவர்கள் நிதியுதவி

கமுதி; கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டது.கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 1998, - 2000 ஆண்டு வரை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிர்வாகக் குழு செயலாளர் அஷ்ரப் சுனைத் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் உசேன் முன்னிலை வகித்தார்.அப்போது முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளி வளாகம் முழுவதும் 32 சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்க முன்னாள் மாணவர்கள் சார்பில் நிர்வாகக் குழு செயலாளர் அஷ்ரப் சுனைத்திடம் காசோலையை வழங்கினர்.மேலும் பள்ளிக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று முன்னாள் மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.படித்த பள்ளிக்கு நிதியுதவி வழங்கிய முன்னாள் மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ