முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ராமநாதபுரம்; -ராமநாதபுரம் அருகே மஞ்சூர் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2002ல் பயின்ற பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ராமேஸ்வரத்தில் நடந்தது. பழைய நினைவு களை பகிர்ந்து கொண்டனர். ஜே.லியோன் வரவேற்றார். பணிக் காலத்தில் இயற்கை எய்திய ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள், தேசிய தலைவர்கள், இயற்கை சீற்றங்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர்கள் பழைய நினைவுகளையும், தற்போதைய குடும்ப நிலைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகளை ஆசிரியர் மன்னார்குடி சோமசுந்தரம், ஆசிரியர் திருவாரூர் விஜயகுமார், ஆசிரியர் வேலுார் தமிழரசன் ஆகியோர் வழங்கினர்.பயிற்சி நிறுவனத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை 2027 ல் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை பங்கீடாக வழங்கி நலிவுற்ற பள்ளிகள், மாணவர்கள் நலனுக்கு உதவுவது. நலிவுற்ற ஆசிரியர்கள் குடும்பத்திற்கு உதவுவது. பணி நிறைவு விழாவில் பங்கேற்பது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர்.ராமேஸ்வரம் தீவில் பாம்பன் பாலம், குந்துகால் விவோகனந்தர் மணிமண்டபம், வில்லுாண்டி தீர்த்தம், அரிச்சல்முனை, தனுஷ்கோடி போன்ற சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை தேரிருவேலி ஆசிரியர் பரமசிவம், திருவாடானை ஆசிரியர் கணேசன் செய்திருந்தனர்.