உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் பக்தர்கள் வசதிக்கு ஆர்.ஓ., பிளான்ட் தேவை

உத்தரகோசமங்கையில் பக்தர்கள் வசதிக்கு ஆர்.ஓ., பிளான்ட் தேவை

உத்தரகோசமங்கை : - உத்தரகோசமங்கையில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ஏப்., 4ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்த நிலையில் இங்கு பக்தர்களின் குடிநீர் வசதிக்காக ஆர்.ஓ., பிளான்ட் அமைக்க வேண்டும்.கோயிலில் தற்போது மண்டல பூஜை துவங்கியுள்ள நிலையில் மங்களநாதர் சுவாமி கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.காலை முதல் இரவு 8:00 மணி வரை அதிகளவு பக்தர்கள் கூட்டம் வந்து செல்லும் நிலையில் பக்தர்களின் வசதிக்காக புதியதாக ஆர்.ஓ., பிளான்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பக்தர்கள் கூறியதாவது: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சன்னதி, மங்கள தீர்த்தம் அருகே பயன்படாத நிலையில் காட்சி பொருளாக ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட் உள்ளது. திருப்புல்லாணி யூனியன் நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட இந்த ஆர்.ஓ., பிளான்ட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வரும் நிலையில் கோடை காலமாக உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் தொட்டி வைக்கவும் புதியதாக ஆர்.ஓ., பிளான்ட் திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி