உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடியில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு வருடாபிஷேகம் பத்து நாட்கள் விழாக்கோலம்

கடலாடியில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு வருடாபிஷேகம் பத்து நாட்கள் விழாக்கோலம்

கடலாடி: கடலாடியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் 7ம் ஆண்டு வருடாபிஷேக விழாவும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62ம் ஆண்டு குருபூஜை விழா கடலாடி நகர் தேவர் மகா சபை 36ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது.அக்.18ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஒவ்வொரு நாளும் இரவில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், பல்சுவை கலை நிகழ்ச்சி, வள்ளி திருமண நாடகம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.இன்று காலை பால்குடம், பூத்தட்டு ஊர்வலம், அக்னி சட்டி, நகர் வலம் விளையாட்டு போட்டிகள் மற்றும் தேவருக்கு மகா அபிஷேகம் தீபாராதனை உள்ளிட்டவைகள் நடக்கிறது. அக்.27ல் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு உள்ளிட்ட பிரிவுகளில் மாட்டு வண்டி பந்தயம் நடக்க உள்ளது.ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர் மகாசபை மற்றும் நகர் தேவர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை