உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

திருப்புல்லாணி : திருப்புல்லாணி சாலை தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் கடந்த ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு பூர்த்தியானதை முன்னிட்டு வருடாபிஷேக விழா நடந்தது.யாகபூஜையுடன் மூலவர் புல்லாணி மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமுக தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை பாபு சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பனர்கள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வருடாபிஷேகம், அம்மன் அவதகார தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிகேஷம் செய்து, சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி