உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள குச்சிலியமடத்து மகாமுனிஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. கடந்த ஆண்டு செப்., 15 இல் புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு வருடாபிஷேக விழாவில் காலையில் யாக பூஜைகளுடன் மூலவர்கள் மகாமுனிஸ்வரர், காளியம்மன், கணபதி, முருகன், நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை