மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
13 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
13 hour(s) ago
தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக தட்டைப்பயிறு
13 hour(s) ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பலியான நிலையில் மேலும் ஒருவர் இறந்தார்.மதுரை நவக்குளம் கோபால் மகன் பாண்டித்துரை 27, சின்ன அனுப்பானடி சேதுராமன் மகன் கருப்புசாமி 27, கமுதி அருகே ஆண்டநாயகபுரம் பாலகிருஷ்ணன் மகன் வினோத்குமார் 27. நண்பர்களான மூவரும் மதுரையில் மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர்களாக பணி செய்தனர்.நேற்று முன்தினம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரைக்கு ஒரே டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்று விட்டு மாலை மதுரை திரும்பினர். அப்போது சாயல்குடி- முதுகுளத்துார் ரோட்டில் ஒருவானேந்தல் அருகே சென்ற போது எதிரில் முதுகுளத்துாரில் இருந்து சாயல்குடி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.இதில் வினித்குமார், பாண்டித்துரை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். கருப்புசாமி பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரவு 11:00 மணிக்கு கருப்புசாமி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago