உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஜவஹர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் கலை நிகழ்ச்சிகளை வழங்கினார். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. லஞ்சம் கேட்டால் டி.எஸ்.பி., 94986 52169, இன்ஸ்பெக்டர்கள் 94986 52166, 94986 52167 என்ற அலைபேசிகளில் புகார் தரலாம். புகார் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ