உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போதைப்பொருள் எதிர்ப்பு   விழிப்புணர்வு கருத்தரங்கம்

போதைப்பொருள் எதிர்ப்பு   விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதை ஒழிப்பு மன்றம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பள்ளி தலைமையாசிரியை ஞானலெட் சொர்ணகுமாரி தலைமை வகித்தார். போதை தடுப்பு மன்ற பொறுப்பாளர் ரோஸ்லின் வரவேற்றார். கருத்தரங்கில் பிளஸ் 1, 2 மாணவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ் பெக்டர் கண்ணன் பேசினார். ஏட்டு உதயக்குமார், போலீஸ்காரர் குமார் ஆகியோர் பங்கேற்றனர். முதுகலை ஆசிரியை அருள் ஜீவா நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் அருள் அற்புதராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !