மீனவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
தொண்டி: மீன்வள மகளிர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.தொண்டி மீன்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது:மீன்வளர்ப்பு மற்றும் மீன்வள மகளிர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியத்தோடு வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.ஆதார் அட்டை, மீன்வள அட்டை, மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எண், பயன் பெற விரும்பும் திட்டம், வங்கி கணக்கு எண், ரேஷன்கார்டு நகல் போன்ற பல்வேறு தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மீன்வளத்துறை அலுவலகத்தை அணுகலாம் என்றனர்.