உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு பாராட்டு விழா 

மாணவர்களுக்கு பாராட்டு விழா 

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் கொடிக்கால்காரர் வெள்ளாளர் உறவின்முறை நலச்சங்கம் சார்பில்,10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் நாகேஸ்வர லோகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அழகர்சாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பரமக்குடி விவேகானந்தா கல்வி அறக்கட்டளை டிரஸ்டி வேணுகோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் வழக்கறிஞர் முருகபூபதி ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் வ.உ.சி., புத்தகம் பரிசு வழங்கினார்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு பதிலாக பெற்றோர் பரிசுகளை பெற்றுக்கொண்டனர். மாவட்ட பொருளாளர் பூவலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை