உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு

ராமநாதபுரம்: நடப்பு கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில இலக்கிய மன்றம் போட்டிகள் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி ரக்ஸனா கட்டுரை எழுதுதலில் முதலிடம் பிடித்தார். பேச்சுப் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி ஷாஷினி, கதை சொல்லுதலில் 7-ம் வகுப்பு மாணவி பவிக்ஸா ஆகியோர் இரண்டாமிடமும், கதை சொல்லுதலில் 9-ம் வகுப்பு மாணவி தீப்தி மூன்றாமிடமும் மாவட்ட அளவில் பெற்றுள்ளனர். இதில் ரக்ஸனா திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். பரிசு பெற்ற மாணவிகள், ஆங்கில இலக்கிய மன்றப் பொறுப்பாசிரியர் வளர்மதியையும், தலைமையாசிரியர் யுனைசி, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !