உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவிலில் அர்ஜுனன் திரவுபதி திருக்கல்யாணம்

நயினார்கோவிலில் அர்ஜுனன் திரவுபதி திருக்கல்யாணம்

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஏப்.,8 கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. சக்தி கரகம் எடுக்கப்பட்டு மகாபாரத கதைகள் கூறப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் பீமன் வேடம் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு அர்ஜுனன், திரவுபதி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று அர்ஜுனன் தபசு நிலையும், ஏப்.,15 இரவு பூக்குழி விழாவும் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை