உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெளிநாட்டில் பணிபுரிபவரிடம் இடம் வாங்கி தருவதாக ரூ.86 லட்சம் மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் பணிபுரிபவரிடம் இடம் வாங்கி தருவதாக ரூ.86 லட்சம் மோசடி செய்தவர் கைது

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் வெளிநாட்டில் பணிபுரிபவரிடம் இடம் வாங்கி தருவதாக ரூ.86 லட்சம் மோசடி செய்ததாக சங்குநாதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே குதக்கோட்டை அருகே உத்தரவையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகுமார் 42. இவரது சகோதரர் கேசவன் சவுதி அரேபியாவில் பணிபுரிகிறார். தான் சம்பாதித்த பணத்தை சொந்த ஊரில் முதலீடு செய்ய ஆசைப்பட்ட கேசவன் உத்தரவை பகுதியை சேர்ந்த சங்குநாதனிடம் 39, இடம் வாங்கி தரும்படி கூறினார். சங்குநாதன் ரூ.சென்ட் 15 லட்சம் என தெரிவித்துள்ளார்.அதை நம்பிய கேசவன் 2021 முதல் 2023 வரை பல்வேறு தேதிகளில் ரூ.86 லட்சத்தை சங்குநாதனிடம் கொடுத்தார். அவர் இடம் வாங்கித்தராமல் ஏமாற்றினார். மேலும் பணம் கேட்டபோது சங்குநாதன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கேசவன் தனது சகோதரர் நந்தகுமார் மூலம் எஸ்.பி., சந்தீஷிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ., பால்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து சங்குநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ