உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் கோயில்களில் அம்பு விடுதல் விழா

ராமநாதபுரம் கோயில்களில் அம்பு விடுதல் விழா

ராமநாதபுரம்: விஜயதசமியை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை ராஜ ராஜேஸ்வரியம்மன் கோயில், சிவன் கோயில், வனசங்கரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் அம்மன் அம்பு விடுதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,21 ல் காப்புக்கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்கியது. காமதேனு, சிம்மம், ரிஷபம் ஆகிய வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார். தினமும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் (அக்.2ல்) விஜயதசமியை முன்னிட்டு இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்படாகி பரிவார தெய்வங்களுடன் கேணிக்கரை ரோட்டில் உள்ள மகர் நோன்பு திடலில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அசுரன் மீது அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காவல் தெய்வம் வன சங்கரி அம்மன் கோயில்களில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அம்பு விடுதல் நிகழ்ச்சி நடந்தது. கன்னிகா பரமேஸ்வரி கோயில், மகா சக்திநகர் மாரியம்மன் கோயிலில் கொலு பொம்மைகள் வைத்து பூஜைகள் நடந்தது. சாயக்கார தெரு முத்துமாரியம்மன் கோயில், ராமநாதபுரம் வெட்டுடையாள் காளியம்மன் கோயில், பிள்ளைக்காளியம்மன் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் விஜயதசமி சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை