உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கு மார்ச் 22, 23ல் கலைக்குழு தேர்வு 

சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கு மார்ச் 22, 23ல் கலைக்குழு தேர்வு 

ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் 'சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'விற்கான கலைக் குழுக்கள் தேர்வு மாவட்டந்தோறும் மார்ச் 22, 23ல் நடக்கிறது.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் பொங்கல் விழாவின் போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை மற்றும் கடந்த ஆண்டு கோவை, தஞ்சாவூர், வேலுார், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடந்தது. இவ்வாண்டும் மேற்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களின் பதிவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22, 23ல் காலை 10:00 மாலை 5:00மணி வரை நடக்கிறது. நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு, பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுவிர் வரும் மார்ச் 22ல் தேர்வு செய்யப்படவுள்ளனர். தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கணியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடன நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்கள் வரும் மார்ச் 23ல் தேதி தேர்வு செய்யப்படவுள்ளனர். தனிநபர் பங்கேற்க அனுமதியில்லை. குழுவினர் மட்டும் பங்கேற்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நிகழ்ச்சி பதிவுகள் நடைபெற உள்ளன. கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 20க்குள் சமர்பிக்க வேண்டும். ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட விடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விபரங்களை artandculture.tn.gov.in/ta என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை