உள்ளூர் செய்திகள்

சங்க பேரவை கூட்டம்

பரமக்குடி: பரமக்குடியில் கைத்தறி நெசவு தொழிலாளர்களின் ஆண்டு பேரவை கூட்டம் தலைவர் ராதா தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் பெருமாள், ருக்குமாங்கதன், செயலாளர் சிவக்குமார், துணைச் செயலாளர்கள் லட்சுமி நாராயணன், நாகநாதன், பொருளாளர் கே.வி.நாகநாதன் தேர்வு செய்யப்பட்டனர்.கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு மற்றும் கச்சா பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும். கைத்தறி துணிக்கு ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். 11 ரக ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ