உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ஆட்டோ டிரைவர், விடுதி உரிமையாளர் மோதல்

ராமேஸ்வரத்தில் ஆட்டோ டிரைவர், விடுதி உரிமையாளர் மோதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஆட்டோ டிரைவர், விடுதி உரிமையாளர் இடையே அடிதடி ஏற்பட்டது. இதில் விடுதி உரிமையாளரை கைது செய்யக் கோரி ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரம் வேர்க்கோடு ஆட்டோ டிரைவர்கள் சீவகன் 36, ஹரிகரன் 25, இருவரும் பஸ் ஸ்டாண்ட் அருகில் ராமநாதன் என்பவரது தங்கும் விடுதி அருகில் சுற்றுலா பயணிகளிடம் சவாரி செல்ல தலா ஒருவருக்கு ரூ. 130 பேசினர். அப்போது விடுதி உரிமையாளர் ராமநாதன் சுற்றுலா பயணிகளை வேனில் அழைத்துச் செல்ல தலா ரூ. 150 கட்டணம் பேசி உள்ளார். இதனால் விடுதி உரிமையாளருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் சீவகன், ராமநாதன் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.ராமநாதன், அவரது மகன் தர்மகுமார் ஆகியோரை கைது செய்ய கோரி சீவகன் தரப்பு ஆட்டோ டிரைவர்கள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். போலீசார் சமரசம் செய்ததும், ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர். அரை மணி நேரம் நடந்த மறியலில் போக்குவரத்து பாதித்தது.ராமேஸ்வரம் டவுன் போலீசார் ஹரிகரன், தர்மகுமார் 26, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ