உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது

நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கலை மன்றம் சார்பில் செவ்வியல் மற்றும் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து விருது வழங்கி பாராட்டினார். இதில் 2022--23 மற்றும் 2023--24-ஆம் ஆண்டுகளில் விருது பெற தகுதி பெற்ற மாவட்ட அளவிலான சிறந்த 30 கலைஞர்கள் பங்கேற்றனர். கலை சுடர்மணி விருது தேவார இசைக்கலைஞர் ஆர்.ரமணி, மரக்காலாட்டக் கலைஞர் ரா.கலைமுருகன், இசை நாடகக் கலைஞர் ஆ.முத்துச்சாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தலா ரூ.10 ஆயிரம் காசோலை, பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது.கலை இளமணி, கலை நன்மணி, கலை வளர்மணி விருதுகள் பரதநாட்டியம், நாதஸ்சுரம், தவில், சிலம்பம், ஓவியம், நாடக கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் காசோலை, பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், பணியாளர்கள், ஒதுவார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ