உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு

விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு

ராமநாதபுரம்: தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். இதில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வென்ற வீரர்களுக்கு முதல் தவணையாக ரூ.44 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். கலெக்டர் கூறியதாவது: ஆக.,26 முதல் செப்.,9 வரை போட்டிகள் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். ஐந்து பிரிவுகளில் 25 வகையான போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 2220 வீரர்களுக்கு பரிசுதொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் முதல் இடங்களில் தேர்வு செய்யப்பட்ட 656 வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்றார். ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், ஹாக்கி பயிற்சியாளர் மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ