உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனை மரங்களை காக்க விழிப்புணர்வு தேவை: செங்கல் சூளைக்காக அழிக்கப்படும் அவலம்

பனை மரங்களை காக்க விழிப்புணர்வு தேவை: செங்கல் சூளைக்காக அழிக்கப்படும் அவலம்

சிக்கல்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் விறகிற்காகவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூலோகத்தின் கற்பகத் தருவாக விளங்கும் பனை மரங்களால் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் பனைமரத் தொழிலை நம்பி உள்ளனர். இந்நிலையில் செங்கல் சூளைகளில் எரிபொருளுக்காக பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன.வாலிநோக்கம், சேனாங்குறிச்சி, அடஞ்சேரி, காமராஜர்புரம், கழநீர்மங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மிகுதியான அளவு பனை மரங்கள் உள்ளன. விளை நிலங்களுக்காக பனை மரங்கள் வெட்டி அழிக்கும் போக்கு பெருவாரியாக தொடர்வதால் பனை மரங்கள் அழிவை சந்திக்கும் பேராபத்து நிலவுகிறது.இயற்கை ஆர்வலர் குகன் கூறியதாவது:சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து அழிக்கப்படும் பனை மரங்களை மாவட்ட நிர்வாகம் காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரத் தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. எவ்வித முறையான அனுமதியின்றி பனை மரங்களை வெட்டி அழிக்கும் கும்பல் கைவரிசையை காட்டுகின்றனர். ஒரு மரத்திற்கு ரூ.200 முதல் 250 வரை விலை பேசி 40 முதல் 80 ஆண்டு பழமை வாய்ந்த பலன் தரும் பனை மரங்களை வெட்டி அழிக்கின்றனர். கிராமங்களில் எவ்வித முன் அனுமதியும் இன்றி பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும்.பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் கிராம உதவியாளர்கள், வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., உள்ளிட்டோர் பார்வையிட்டு தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பனை மரங்களை அழிவில் இருந்து காப்பதற்கு உரிய விழிப்புணர்வு நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை