உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிரதமர் மருத்துவ காப்பீடு குறித்து தேவை விழிப்புணர்வு

பிரதமர் மருத்துவ காப்பீடு குறித்து தேவை விழிப்புணர்வு

திருவாடானை::பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பதிவு செய்ய வழிமுறைகள் தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். மத்திய அரசின் பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி எளிய முறையில் தவணை செலுத்திக் கொள்ள வழி செய்துள்ளது. இத்திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு கிடையாது. அவ்வாறு இருந்தாலும் வழிமுறைகள் தெரியாததால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.இக்கட்டான நிலைமையில் இருக்கும் போது தான் இன்சூரன்ஸ் போடாதது குறித்து பலருக்கும் கவலை ஏற்படுகிறது. இத் திட்டம் குறித்து அதிகாரிகள் ஒவ்வொரு கிராமப் பகுதிகளுக்கும் சென்று ஏழை மக்கள், கூலித் தொழிலாளர்களிடம் இத்திட்டங்களின் நன்மைகள் குறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தமிழகத்தில் பி.எச்.எச்., என்.பி.எச்.எச்., உள்ளிட்ட 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டு அனைத்தும் ஒரே வகையாக இருந்தாலும், அதில் இருக்கும் குறியீடுகளை வைத்தே எந்த வகை என அறிந்து கொள்ள முடியும். இதில் பி.எச்.எச்., கார்டை வைத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.ஆனால் ஆன்லைனில் பார்த்த போது நிறைய பேருக்கு லிஸ்ட்டில் பதிவாகாமல் விடுபட்டுள்ளது. ஆகவே பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அனைவரும் பயன் பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை