உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

பரமக்குடி : பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லுாரி மற்றும் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் போதை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி சேர்மன் முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். ஐந்து முனை ரோடு பகுதியில் துவங்கிய ஊர்வலம் மதுரை, ராமநாதபுரம் ரோடு, ஆர்ச், காந்தி சிலை, பெரிய கடை, ஆற்றுப்பாலம் வழியாக திரவுபதி அம்மன் கோயில் முன்பு நிறைவடைந்தது. அப்போது விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி