உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விழிப்புணர்வு நடைபயணம்

 விழிப்புணர்வு நடைபயணம்

ராமநாதபுரம்: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு நடைபயணம் நடத்தினர். மாவட்ட தலைவர் கண் இளங்கோ தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் 86 ஆழ்துளைக் கிணறுகளை தோண்டி எரிவாயு எடுப்பதாக கூறி நாசம் செய்கின்றனர். தினமும் 20 லட்சம் கனமீட்டர் இயற்கை வாயுவை உறிஞ்சுகிறார்கள். இதனால் நீரும், நிலமும் பாதிக்கப்படுகிறது. தற்போது 20 இடங்களில் தோண்ட திட்டமிட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் தீவும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகமும் பாதிக்கப்படும்.இதனை பாதுகாக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ