மேலும் செய்திகள்
மானாமதுரை தர்மசாஸ்தா கோயிலில் கூட்டு பஜனை
25-Nov-2024
கடலாடி: கடலாடி சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள சாஸ்தா நகர் சுவாமி ஐயப்பன் கோயிலில் தினமும் ஐயப்ப பக்தர்களால் கூட்டு வழிபாடு நடக்கிறது.கார்த்திகை முதல் தேதியில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்த பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.ஐயப்ன் உருவப்படத்திற்கு மலர்களால் அர்ச்சனை செய்தும் அலங்காரம் பூஜைகள் செய்தும் ஐயப்பன் பஜனை, நாமாவளி, 18 படிகளிலும் தீப பூஜை, தீபாராதனை உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தர்மசாஸ்தா கோயிலில் குருநாதர் நாகராஜன் தலைமையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
25-Nov-2024