உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடனை அடைத்தும் என்.ஓ.சி., தராத வங்கி  ரூ.50 ஆயிரம் இழுப்பீடு வழங்க உத்தரவு

கடனை அடைத்தும் என்.ஓ.சி., தராத வங்கி  ரூ.50 ஆயிரம் இழுப்பீடு வழங்க உத்தரவு

ராமநாதபுரம் : பரமக்குடி நெல்மடூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் 36. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் டிராக்டர் வாங்குவதற்கு 2020 ஆக.,29ல் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கான தவணை 2 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். அதற்கு முன்பே மொத்த கடன் தொகையையும் செலுத்திய தால் வங்கியிடமிருந்து தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) கேட்டுள்ளார். ஓராண்டுக்கும் மேல் வங்கியில் இருந்து என்.ஓ.சி., தராமல் இருந்து உள்ளனர். திடீரென வாகனத்திற்கான தவணை தொகை நீண்ட காலம் செலுத்த வில்லை. விரைவில் செலுத்தவில்லை என்றால் வாகனத்தை பறிமுதல் செய்ய நேரிடும் என வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதையடுத்து கலை யரசன் ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் 30 நாட் களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை