மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்திற்கு பெர்மிட் கோரி பாம்பனில் மறியல்
18 hour(s) ago
வண்ண வில்
18 hour(s) ago
வானவில் மன்ற போட்டிகள்
18 hour(s) ago
கூட்டுறவு வாரவிழா விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
18 hour(s) ago
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலா தலமாக ராமேஸ்வரம் உள்ளது. ராமேஸ்வரத்திற்கு வட மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்படி இருந்தும் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் இன்னும் இணைக்கப்படாத நிலை தான் உள்ளது.இந்திய தலைநகரமான புதுடெல்லி, கோல்கட்டா, மும்பை, பெங்களூரு, ைஹதராபாத், லக்னோ, மைசூரு, புனே, வாரணாசி, அகமதாபாத், ஆக்ரா, கொச்சி, புதுச்சேரி, புவனேஸ்வர்போன்ற பல்வேறு நகரங்கள் உள்ளன.இந்த நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் வருவதற்கு அவர்கள் மதுரைக்கு வந்து ரயில் மாறி ராமேஸ்வரம் பகுதிக்கு வரும் நிலை உள்ளது. இந்நிலையை மாற்றி முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு நேரடியாக ரயில்கள் இயக்கப்படுவதில்லை.இந்தப்பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வர நினைக்கும் பக்தர்கள் வசதிக்காக நேரடியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.மாதவன், வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர்: அக்.1 முதல் பாம்பன் பாலம் பணிகள் முடிக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக ரயில் சேவைகள் இருந்தால் பயணிகள் எளிதாக ராமேஸ்வரம் வந்து செல்ல முடியும்.ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முக்கியமான நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago