பெரியபட்டினத்தில் ஆலமரம் சாய்ந்தது
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் நுாறாண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலமரம் நேற்று பெய்த மழையால் சாய்ந்தது.பெரியபட்டினத்தில் மகான் செய்யது ஒலியுல்லா தர்கா செல்லும் வழியில் உள்ள நுாறாண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலமரம் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் காலை 11:00 மணிக்கு சாய்ந்தது. அச்சமயத்தில் யாரும் இல்லாததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.எனவே மீண்டும் அதே இடத்தில் புதிய ஆலமரக் கன்றை நட்டு பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.