உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பார் உரிமையாளர் கொலை  முயற்சி வழக்கு: 3 பேர் கைது 

பார் உரிமையாளர் கொலை  முயற்சி வழக்கு: 3 பேர் கைது 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சூரன்கோட்டையை சேர்ந்த பார் உரிமையாளர் நிர்மலை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.சூரன்கோட்டையை சேர்ந்த சிவசங்கரன் மகன் நிர்மல் 34. இவர் கிருஷ்ணா நகர் பகுதியில் மதுபான பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடையை சேர்ந்தவர்களுக்கும், நிர்மலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த முன் விரோதம் காரணமாக தேவிப்பட்டினம் கடற்கரை சாலை சந்திப்பில் டூவீலரில் ஜூன் 25 மதியம் 1:30 மணிக்கு வந்த நிர்மலை ஆட்டோவில் வந்த எட்டு பேர் கும்பல் வெட்டினர்.ஆபத்தான நிலையில் நிர்மல் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உறவினர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் ஆர்.எஸ்.மடை நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் பாரத் 24, அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் மகன் அபினேஷ் 23, ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை