உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரதநாட்டிய அரங்கேற்றம்

பரதநாட்டிய அரங்கேற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அபிநயா நாட்டிய பள்ளி சார்பில் உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் மரகத நடராஜர் சன்னதியில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் மதுரம் அரவிந்த்ராஜ் தலைமை வகித்தார். நாட்டிய பள்ளியின் ஆசிரியர் டாக்டர் மாலதி முன்னிலை வகித்தார். நாட்டிய பள்ளி மாணவிகள் எஸ்.சபீனா ஸ்ரீ, எஸ்.கே.பாரதி, என்.திவ்யதர்ஷினி ஆகியோர் நடனமாடினர். புதுச்சேரியை சேர்ந்த கலைமாமணி விருது பெற்ற இசைக் கலைஞர்கள் சூசைராஜ் , அருண், அழகு ராமசாமி மற்றும் கிருபா முரளி ஆகியோர் பக்கவாத்தியம் இசைத்தனர். மாணவிகளின் பெற்றோர், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை