உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமங்களில் மக்கும் குப்பை மக்கா குப்பை திட்டம் செயல்பட வேண்டும்

கிராமங்களில் மக்கும் குப்பை மக்கா குப்பை திட்டம் செயல்பட வேண்டும்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருவாரியான ஊராட்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மண்புழு உரக்கூடம், மக்கும் குப்பை, மக்கா குப்பையை பிரித்தெடுக்கும் கூடங்கள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. தன்னார்வலர்கள் கூறியதாவது: ஊராட்சியில் தலா ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து இரும்பு தகரத்தாலான ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் மக்கும் குப்பை, மக்கா குப்பையை பிரித்தெடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட இக்கூடத்தில் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் முறையாக அவற்றின் தேவையை உணர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை