மேலும் செய்திகள்
குமரி அனந்தனுக்கு காங்., கட்சி அஞ்சலி
10-Apr-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் அரண்மனை அருகே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான மக்களின் உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக அனுமதி பெறவில்லை என பிளக்ஸ் பேனரை பஜார் போலீசார் எடுத்துச் சென்றதால் பா.ஜ., நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதன் பிறகு பிளக்ஸ் பேனரை திரும்பப் பெற்று பலியான மக்களின் உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி பா.ஜ.,வினர் அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் கயறு வாரிய தலைவர் குப்புராமு, சிறுபான்மை அணி மாநிலச்செயலாளர் அஜ்மல்கான், பொருளாதார பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சண்முகநாதன், தென்னை வாரிய தலைவர் நாகராஜன், ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் குமார், நகரத்தலைவர் நாகராஜன், மாவட்ட, நகர், ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
10-Apr-2025